வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது.

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டி20 போட்டி அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 33 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடாவும் 21 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - சஞ்சு சாம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் 31 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்திருந்த ரிஷப் பந்த் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களோடு நடையைக் கட்டினார். 

இறுதியில் அக்ஸர் படேல் தனது பங்கிற்கு இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என பறக்கவிட, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியும் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 29 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News