WI vs IND, 5th T20I: ஸ்ரேயாஸ், ஹூடா அதிரடி; விண்டீஸுக்கு 189 டார்கெட்!

Updated: Sun, Aug 07 2022 22:03 IST
WI vs IND, 5th T20I: Shreyas Iyer's fifty helps India Post a total on 188/7 (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 3இல் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. 

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியான் கேப்டனாக செயல்படுகிறார். மேலும் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 11 ரன்களில் இஷான் கிஷான் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். 

அவருக்கு துணையாக தீபக் ஹூடாவும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 64 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 ரன்களைச் சேர்த்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை