இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி! 

Updated: Sat, Jul 15 2023 12:38 IST
இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி! (Image Source: Google)

டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 171 ரன்களும், பவுலிங்கில் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளனர்.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “டிக்ளேர் செய்வதற்கு முன்னால் களத்தில் இருந்த ஜடேஜா மற்றும் இஷான் கிஷான் இடம் ஒரு ஓவர் மட்டுமே இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டிருந்தேன். இஷான் கிஷான் தனது முதல் ரன்னை அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்குப் பின்னால்தான் டிக்ளர் செய்ய முடியும். எனவே இதை நான் அவரிடம் சொன்னேன்.

இஷான் கிஷான் பேட்டிங் செய்ய மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார். இதை நான் எப்பொழுதும் பார்த்து வருகிறேன். இந்த நிலையில் நான் டிக்ளர் செய்தது அவரை வெறுப்படைய வைத்திருக்கும். நாட்டுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு ரன்களும் மிக முக்கியமானவை. நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டோம் என்று சொல்லி இந்த பேச்சை நான் ஆரம்பிக்க விரும்புகிறேன். அவர்களை 150 ரன்கள் சுருட்டியது போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தது.

இங்கு பேட்டிங் செய்வது என்பது கடினமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். அதையே நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அப்படி பேட்டிங் செய்து நாங்கள் 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம். பின்பு வெளியேறி பந்துவீச்சில் அவர்களை சுருட்டி வெற்றி பெற்றோம்.

ஜெய்ஸ்வால் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் தயாராக இருக்கிறார் என்று ஏற்கனவே நமக்கு காட்டி இருக்கிறார். மிக விவேகமாக பேட்டிங் செய்தார். அவரது மனோதிடமும் சோதிக்கப்பட்டது. எந்த நிலையிலும் அவர் பீதி அடையவில்லை. அவருக்கு சொல்லப்பட்ட அறிவுரைகளின் படி அவர் நடந்து கொண்டார்.

அஸ்வின் ஜடேஜா பற்றிசொல்வதற்கு நிறைய இல்லை. அவர்கள் தொடர்ந்து இப்படி இந்திய அணிக்கு செய்து கொண்டே வருகிறார்கள். முடிவுகளே அவர்கள் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்டக் கூடியது. இது போன்ற ஆடுகளங்கள் அவர்களுக்கு மிக வசதியானது. அஸ்வின் வெளியே வந்து சிறப்பாக பந்து வீசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது எங்களுக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிக்கான புதிய சுழற்சி. நாங்கள் ஆடுகளத்தைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. நாங்கள் இங்கு வந்து முடிவுகளை பெற விரும்பினோம். நாங்கள் நன்றாக தொடங்குவதுதான் முக்கியமானதாக இருந்தது. இப்பொழுது இதே வேகத்தை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எங்களிடம் இப்பொழுது இரண்டு புதிய வீரர்களும் அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடாத வீரர்களும் இருக்கிறார்கள். எனவே அவர்களை களத்தில் எப்படி இறக்குவது என்று பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை