WI vs PAK: காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளிலிருந்து விலகும் பாகிஸ்தான் நட்சத்திரம்!

Updated: Sat, Jul 31 2021 11:58 IST
WI vs Pak: Azam Khan ruled out from second and third T20I (Image Source: Google)

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இப்போட்டியைக் காண கரோனா தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அசாம் கான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 மற்றும் 3ஆவது டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். 

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அசாம் கான், நரம்பியல் நிபுணரின் அறிவுறுத்தலின் படி ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், இத்தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை