வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் மைக்கேல் லூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் பிராத்வைட் 3 ரன்களிலும், அலிக் அதானாஸ் ஒரு ரன்னிலும், கவேம் ஹாட்ஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேசி கார்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜேசன் ஹோல்டர் 33 ரன்களுடன் தொடர்ந்தார். அவருடன் களமிறங்கிய ஜோமல் வரிக்கன், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஹோல்டருடன் இணைந்த ஷமார் ஜோசபும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஜேசன் ஹோல்டர் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமார் ஜோசப் தனது விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News