WI vs SA, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!

Updated: Tue, Jun 29 2021 23:12 IST
WI vs SA, 3rd T20I: West Indies have won the toss and have opted to field (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேன் பொல்லார்ட் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். 

இன்றையப் போட்டிக்கான  தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசனுக்கு பதிலாக ஐடன் மார்க்ரம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், ஆண்ட்ரே ஃபிளட்சர் ஆகியோருக்கு பதிலாக லிண்டெல் சிம்மன்ஸ், சிம்ரான் ஹெட்மையர்  அணியில் சேர்க்கப்பட்டுள்னர்.

வெஸ்ட் இண்டீஸ் - லிண்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஓபெட் மெக்காய், கெவின் சின்க்ளேர்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை