வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Aug 22 2024 20:47 IST
Image Source: Cricketnmore

West Indies vs South Africa Dream11 Prediction 1st T20I: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம், டிரினிடாட்
  • நேரம் - ஆகஸ்ட் 24, நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs SA: Pitch Report

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மிதவேக பந்துவீச்சாளர்கள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பேட்டர்களுக்கும் பெரும் சவலாக அமையும் என கணிக்கப்படுகிறது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரானது 128 ரன்களாக மட்டுமே உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI vs SA: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 23
  • தென் ஆப்பிரிக்கா - 12
  • வெஸ்ட் இண்டீஸ் - 11

WI vs SA: Live Streaming Details

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

West Indies vs South Africa Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ் : ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பாவல் (கே), ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ஓபேத் மெக்காய், ஷமார் ஜோசப்

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம் (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனோவன் ஃபெரீரா, வியான் முல்டர், நந்த்ரே பர்கர், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்

WI vs SA: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ராஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ரொமாரியோ ஷெப்பர்ட், வியான் முல்டர், ரோஸ்டன் சேஸ்
  • பந்து வீச்சாளர்: நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ஷமார் ஜோசப், அகீல் ஹொசைன்

WI vs SA 1st T20 Dream11 Prediction, Today Match WI vs SA, WI vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs South Africa

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை