வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Aug 06 2024 20:17 IST
Image Source: Cricketnmore

West Indies vs South Africa 1st Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 07) டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விளையாடும் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாகவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட்
  • நேரம் - ஆகஸ்ட் 07, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs SA 1st Test Pitch Report

டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஒவல் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 62 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள. இதில் 20 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 18 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசியானது 304 ரன்களாலும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 166 ரன்களாகவும் உள்ளது.  இந்த மைதானம் போட்டியின் முதல் இரண்டு நாள் பேட்டர்களுக்கு சாதகமாகவும், கடைசி இரண்டு நாள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

WI vs SA Test Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 32
  • வெஸ்ட் இண்டீஸ் - 03
  • தென் ஆப்பிரிக்கா - 22
  • முடிவில்லை - 07

WI vs SA 1st Test: Where to Watch?

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. எனினும் இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் கண்டுகளிக்கலாம்.

West Indies vs South Africa Probable Playing XI

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: கிரேக் பிராத்வைட் (கே), மைக்கைல் லூயிஸ், கேசி கார்டி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா, குடாகேஷ் மோட்டி, கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஷமர் ஜோசப்.

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ஐடன் மார்க்ராம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கே), டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரைன், வியான் முல்டர், கேசவ் மஹராஜ், டேன் பீட், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

WI vs SA T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஷுவா டா சில்வா
  • பேட்ஸ்மேன்கள் - ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, மைக்கைல் லூயிஸ், கவேம் ஹாட்ஜ்
  • ஆல்ரவுண்டர் - ஜேசன் ஹோல்டர், வியான் முல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஷமார் ஜோசப், கீமார் ரோச்

WI vs SA 1st Test Dream11 Prediction, Today Match  WI vs SA, WI vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs SA Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs South Africa

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை