West Indies vs South Africa 2nd Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 15) கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - ஆகஸ்ட் 15, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

WI vs SA 1st Test Pitch Report

கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 351 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸின் சராசரியானது 246 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு பேட்டர்கள் தங்கள் திறனை வெளிக்காட்ட முடியும். எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

WI vs SA Test Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 33
  • வெஸ்ட் இண்டீஸ் - 03
  • தென் ஆப்பிரிக்கா - 22
  • முடிவில்லை - 08

WI vs SA 1st Test: Where to Watch?

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. எனினும் இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் கண்டுகளிக்கலாம்.

West Indies vs South Africa Probable Playing XI

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: கிரேக் பிராத்வைட் (கே), மைக்கைல் லூயிஸ், கேசி கார்டி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா, குடாகேஷ் மோட்டி, கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஜொமல் வாரிகன்

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ஐடன் மார்க்ராம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கே), டேவிட் பெடிங்காம், ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன், வியான் முல்டர், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

WI vs SA T20 World Cup Dream11 Team

விக்கெட் கீப்பர்கள் - ஜோஷுவா டா சில்வா
பேட்ஸ்மேன்கள் - ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, மைக்கைல் லூயிஸ், கவேம் ஹாட்ஜ்
ஆல்ரவுண்டர் - ஜேசன் ஹோல்டர், வியான் முல்டர்
பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஷமார் ஜோசப், கீமார் ரோச்

Advertisement

WI vs SA 2nd Test Dream11 Prediction, Today Match  WI vs SA, WI vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs SA Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs South Africa

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News