WI vs SA: காயம் கரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜெரால்ட் கோட்ஸி; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

Updated: Thu, Jul 25 2024 15:13 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அறிமுக வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜெரால்ட் கோட்ஸி விளையாடிய நிலையில், அத்தொடரின் போது காயமடைந்தார். இதையடுத்து அத்தொடரில் இருந்து விலகிய அவர், தனது காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் அவரது காயம் குணமடைய கொஞ்சம் காலம் தேவை என்பதால் தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கான மாற்று வீரராக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் பிரிட்டோரியஸ் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன். மைக்கேல் பிரிட்டோரியஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை