வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Thu, Jun 19 2025 20:39 IST
Image Source: Google

West Indies Women vs South Africa Women 1st T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை வென்றுள்ள நிலையில், டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபக்கம் ஒருநாள் தொடரின் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டிஸ் அணியும் களமிறங்கும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

WI-W vs SA-W 1st ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
இடம் - ஓவல் கிரிக்கெட் மைதானம், பார்படாஸ்
நேரம்- ஜூன் 20, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Three Ws Oval, Barbados Pitch Report

இப்போட்டி நடைபெறும் பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மூன்று ஒருநாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அதுவும் தற்சமயம் நடைபெற்றும் வரும் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் தான். இதன் காரணமாகம் மைதானம் குறித்த தரவுகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கு பேட்டர்களுக்கு அதிக சாதகம் இருப்பதால் நிச்சயம் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI-W vs SA-W: Where to Watch?

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் காணலாம்.

WI-W vs SA-W Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 23
  • தென் ஆப்பிரிக்கா - 08
  • வெஸ்ட் இண்டீஸ் - 14
  • முடிவு இல்லை - 01

WI-W vs SA-W 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஷெமைன் காம்ப்பெல்
  • பேட்டர்ஸ் - லாரா வோல்வார்ட், சுனே லூஸ், கியூனா ஜோசப், டாஸ்மின் பிரிட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), மரிசான் கேப் (கேப்டன்), சினெல்லே ஹென்றி, அன்னரி டெர்க்சன்
  • பந்துவீச்சாளர்கள் - அஃபி பிளெட்சர், நோன்குலுலெகோ மலாபா.

West Indies Women vs South Africa Women 1st T20I Probable Playing XI

West Indies Women Probable Playing XI: ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), கியானா ஜோசப், ஜடா ஜேம்ஸ், ஷெமைன் காம்ப்பெல், ஸ்டாஃபானி டெய்லர், சினெல்லே ஹென்றி, ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், ஜானிலியா கிளாஸ்கோ, அலியா அலீன், கரிஷ்மா ராம்ஹராக், அஃபி பிளெட்சர்.

South Africa Women Probable Playing XI: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேரி டெர்க்சன், சுனே லூஸ், மரிஸான் கேப், க்ளோ ட்ரையோன், நதின் டி கிளர்க், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அயன்டா ஹ்லுபி, அயபோங்கா காக்கா.

WI-W vs SA-W 1st T20I Dream11 Prediction, WI-W vs SA-W ODI Dream11 Team, Fantasy Cricket Tips, WI-W vs SA-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, West Indies Women vs South Africa Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை