ஐபிஎல் 2025: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் இருவரும் தலா 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது.
சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், உனாத்கட், ஹர்ஷல் படேல், மலிங்கா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் தனித்துவ சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் மொத்தமாக 4 ஓவர்களை வீசிய நிலையில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக அவர் பவர் பிளேவில் மூன்று ஓவர்களை வீசிய நிலையில் மூன்று ஓவர்களின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியும் அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கேப்டன் எனும் சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.
மேற்கொண்டு இப்போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே பாட் கம்மின்ஸ் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தியதான் மூலம், எஸ்ஆர்எச் அணிக்காக முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த நான்காவது பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். அவருகு முன் ஜெகதீஷ் சுசித் (2022, விராட் கோலி), புவனேஷ்வர் குமார் (2023, பிரப்சிம்ரன் சிங்) மற்றும் முகமது ஷமி (2025, ஷேக் ரஷீத்) ஆகியோர் மட்டுமே இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசன், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனத்கட்.
இம்பேக்ட் வீரர்கள்: டிராவிஸ் ஹெட், முகமது ஷமி, ஹர்ஷ் துபே, ராகுல் சாஹர், வியான் முல்டர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: அபிஷேக் போரல், ஃபாஃப் டு பிளெசிஸ், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், டி நடராஜன்.
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: அஷுதோஷ் சர்மா, மோஹித் சர்மா, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், சமீர் ரிஸ்வி, முகேஷ் குமார்.