ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.

Advertisement

மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என்றும் அதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், அன்கேப்ட் வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில்  ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும் என்ற நடைமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு அணி 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த தொகையானது ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும் என்ற நிலையை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. இதனால் அணிகள் இந்த ஏலத்தில் எவ்வாறு செயல்படும் என்று பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரிஷப் பந்த் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதவு ஒன்றானது தற்சமயம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் அவர் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதுகுறித்து ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பதிவில், "எதிர்வரும் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் நான் பங்குபெற்றால், அதில் நான் ஏலத்தில் எடுக்கப்படுவே அல்லது இல்லை? ஒருவேளை ஏலத்தில் வாங்கப்பட்டால் எந்த தொகைக்கு வாங்கப்படுவேன்” என்று கேள்வியை எழுப்பினார். இதனால் வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திக்ல் ரிஷப் பந்த் பங்கேற்கிறாரா என்ற கேள்வியை இந்த பதிவு எழுப்பியுள்ளது. ஏனெனில் இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அல்லது ரிஷப் பந்த் ஆகியோரிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரிஷப் பந்தின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News