விஸ்டன் உலக சாம்பியன்ஷிப் லெவன் அணியில் இடம்பிடித்த இந்தியர்கள்!

Updated: Tue, May 04 2021 12:27 IST
Wisden's World Test Championship XI (Image Source: Google)

சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்திலுள்ள ஜூன் 18ஆம் தேதி ஆஜெஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதனிடையே சர்வதேச விளையாட்டு நாளிதழான விஸ்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷ் தொடருக்கான லெவன் அணியை இன்று அறிவித்துள்ளது. 

இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்படவில்லை.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிளேயிங் லெவன் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

விஸ்டன் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, கருணரத்னே, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் (கே), பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பந்த், கெய்ல் ஜெமிசன், ரவிச்சந்திரன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், ஸ்டூவர்ட் பிராட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை