இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48 வது பிறந்த தினத்தை தினம் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிசிசிஐ, இந்திய அணி வீரர்கள், தடகள வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அவருக்கு யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரஹானே, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

Advertisement

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள இரட்டை சதத்தின் ஹைலைட்சை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலியாக பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஐசிசி, இந்திய அணி உள்ளிட்டவை தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

இதனிடையே முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்திருக்கும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். சச்சினுக்கு கிரிக்கெட்டின்மீது இருக்கும் ஆர்வமே தாங்கள் கிரிக்கெட்டை விரும்ப காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜிங்க்யா ரஹானேவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் வீரரும் சச்சினின் சக தோழருமான வெங்கடேஷ் பிரசாத்தும் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே அவர் கேப்டனாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 

இதேபோல சிஎஸ்கேவும் சச்சினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டை திருவிழாவாக மாற்றிய சச்சினுக்கு வாழ்த்துக்கள் என சிஎஸ்கே தெரிவித்துள்ளது. இதேபோல தடகள வீராங்கனைகள ஹிமா தாஸ், சாக்ஷி மாலிக், உள்ளிட்டவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News