WIW vs PAKW: விண்டீஸை வீழ்த்தி ஆறுதல் தேடிக்கொண்ட பாகிஸ்தான்!

Updated: Tue, Jul 20 2021 10:26 IST
Image Source: Google

பாகிஸ்தான் மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் தொடரையும் 3-1 என கைப்பற்றியிருந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்பின் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 34 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக் முனீபா அலி 39 ரன்களையும், ஒமைமா சொஹைல் 34 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபாதிமா சானா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை