WIW vs SAW, 1st T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 98 ரன்களைக் குவித்ததுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றி ஆட்டநாயகி விருதை வென்றுள்ளார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் டஸ்மின் பிரிட்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் லாரா வோல்வார்ட் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனைகள் மரிஸான் கேப் 2 ரன்களுக்கும், நதின் டி கிளார்க் 21 ரன்னிலும், மைன் ஸ்மித் 9 ரன்னிலும், சோலே ட்ரையான் 16 ரன்னிலும், அன்னேரி டெர்க்சன் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்திருந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த டஸ்மின் பிரிட்ஸ் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜஹ்சாரா கிளாக்ஸ்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. இதில் கியானா ஜோசப் 5 ரன்னிலும், கேப்டன் ஹீலி மேத்யூஸ் 19 ரன்னிலும், ரியலியானா கிரிமண்ட் 4 ரன்னிலும், ஷெமைன் காம்பெல் 16 ரன்னிலும், சினென்லே ஹென்றி 26 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமற்றமளித்தனர். 

Also Read: LIVE Cricket Score

இறுதியில் ஜானிலியா கிளாஸ்கோ அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களைச் சேர்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மரிஸான் கேப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News