WIW vs SAW, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பார்படோஸில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டஸ்மின் பிரிட்ஸ் சதமடித்து அசத்திய நிலையில், லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன் மூலமாக இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

Advertisement

அதன்பின் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 101 ரன்களைச் சேர்த்த கையோடு டஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களைச் சேர்த்த கையோடு லாரா வோல்வார்ட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மரிஸான் கேப் 34 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 45.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு 39 ஓவர்களில் 288 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஹீலி மேத்யூஸ், கியானா ஜோசப், ஸைதா ஜேம்ஸ், சினெல்லே ஹென்றி, ஷமைன் காம்பெல், ஜெனிலியே கிளாஸ்கோ உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 40 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இணைந்த அலியா அலீன் மற்றும் ஜஹ்சாரா கிளாக்ஸ்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலியா அலீன் 32 ரன்களிலும், கிளாக்ஸ்டன் 43 ரன்னிலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்களில் ஆல் அவுட்டானது, தென் ஆப்பிரிக்க தரப்பில் மஸபடா கிளாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News