WI-W vs SA-W, 3rd T20I: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2011ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த அணிக்கு எதிராக டி20 தொடரை வென்று சாதித்துள்ளது. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் சுனே லூஸ் 13 ரன்னிலும், தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் மற்றும் மியான் ஸ்மிட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லாரா வோல்வர்ட் 28 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் களமிறங்கிய மரிஸான் கேப், கரபோ மெசோ, சோலே ட்ரையான் உள்ளிட்ட வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த மியான் ஸ்மித் 59 ரன்களைச் சேர்த்தார். 

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கரிஷ்மா ரம்ஹராக் மற்றும் அஃபி ஃபிளெட்சர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கியானா ஜோசப் 6 ரன்னிலும், ரியலியானா கிரிமண்ட் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் ஷெமைன் காம்பெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதில் ஹீலி மேத்யூ அரைசதம் கடந்த நிலையில் 65 ரன்னிலும், ஷெமைன் காம்பெல் 42 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இறுதியில் சினெல்லே ஹென்றி 20 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 தொடரை வென்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News