WIW vs SAW: லீசெல் லீ அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி!

Updated: Wed, Sep 08 2021 11:44 IST
WIW vs SAW: Lizelle Lee 91* headlines dominant win for South Africa (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் அப்பிரிக்க மகளிர் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நைட் - நேஷன் இணை மட்டும் சற்று நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியால் எடுக்க முடிந்தது.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு லீசெல் லீ - லாரா வால்வர்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் லாரா 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூன் லூயஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிசெல் லீ அரைசதம் கடந்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இதன் மூலம் 39 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்களைச் சேர்த்த லிசெல் லீ ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை