மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரின் சிறப்பான சதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 123 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 109 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டெண்ட்ரா டோட்டின் - ஹேலி மேத்யூஸ் அணி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இந்த இணை 12 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் டோட்டின் அரைசதம் கடந்தார். அதன்பின் ஹேலி மேத்யூஸ் 43 ரன்களில் ஆட்டமிழக்க, டோட்டின் 62 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் 40.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றதுடன், இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News