நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி பூஜா வஸ்த்ரேகர், ஸ்நே ராணா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரேகர் 67 ரன்களையும், ஸ்நே ராணா 53 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சீராண இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியின் தொடக்க வீராங்கனை சித்ரா அமீன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் 43 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராஜஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News