மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ரேச்சல் ஹெய்னஸின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 310 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரேச்சர் ஹெய்னஸ் 130 ரன்களையும், கேப்டன் மெக் லெனிங் 86 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் லாரன் வின்ஃபில்ஹில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த டாமி பியூமண்ட் - ஹீதர் நைட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டாமி பியூமண்ட் அரைசதம் கடந்தார்.

அதைத்தொடர்ந்து 74 ரன்களில் பியூமண்ட் ஆட்டமிழக்க, 40 ரன்களில் ஹீதர் நைட்டும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்டாலி ஸ்கைவர் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார்.

Advertisement

இதில் நட்டாலி ஸ்கைவர் சதம் விளாசியும் அசத்தினார். இருப்பினும் இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலிய தரப்பில் கடைசி ஓவரை வீசிய ஜெஸ் ஜோனசன் 3 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார் வெற்றியைப் பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் கடைசி வரை போராடிய நடாலி ஸ்கைவர் 109 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News