இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லெஸிடரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீராங்கனைகள் ஏமி ஜோன்ஸ் 3 இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்தையும், டாமி பியூமண்ட் 2 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்திலும், மேகன் ஷாட் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்காவின் அயபோங்கா காக்கா 15ஆம் இடத்திற்கும், வங்கதேச அணியின் ரபேயா கான் 19ஆம் இடத்திற்கும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் 20ஆவது இடத்திற்கும், நியூசிலாந்தின் ஹன்ன ரோவ் 22அம் இடத்திற்கும், தென் ஆப்பிரிக்காவின் நதின் டி கிளார்க் 23ஆம் இடத்திற்கும், இந்திய அணியின் ரேனுகா சிங் 24ஆம் இடத்திற்கும், பாகிஸ்தானின் ஃபாதிமா சனா 27ஆம் இடத்திற்கும் முன்னேறிவுள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News