இலங்கையில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை மற்றும் மலேசிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

Advertisement

அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் சமாரி அத்தப்பத்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 26 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனி 31 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சமாரி அத்தபத்து தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சமாரி அத்தபத்து 14 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 119 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இலங்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. மலேசியா அணி தரப்பில் கேப்டன் வினிஃபெர்ட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய மலேசிய அணியானது ஆரம்பம்  முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அந்தவகையில் அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் கேப்டன் வினிஃபெர்ட் துரைசிங்கம், நான் ஜூலியா, எல்ஸா ஹண்டர், இஸ்மையில், ஹமிஸா ஹஷிம், ஐனா நஜ்வா, தனஸ்ரீ முகுனன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக எல்ஸா ஹண்டர் 10 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற எந்தவொரு வீராங்கனையும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. 

இதன் காரணமாக மலேசிய மகளிர் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் மலேசிய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய சமாரி அத்தபத்து ஆட்டநாயகி விருதை வென்றார்.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News