மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை அறிவிப்பு; அக்.06இல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

Updated: Sun, May 05 2024 15:44 IST
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை அறிவிப்பு; அக்.06இல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்! (Image Source: Google)

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் நடைபெறும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் போட்டியை அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்பின் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம்பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் இடம்பிடித்துள்ளன.

இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குரூப்பில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது. இதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை

  • அக்டோபர் 3: இங்கிலாந்து v தென் ஆப்பிரிக்கா, டாக்கா
  • அக்டோபர் 3: வங்கதேசம் v குவாலிஃபையர் 2, டாக்கா
  • அக்டோபர் 4: ஆஸ்திரேலியா v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
  • அக்டோபர் 4: இந்தியா v நியூசிலாந்து, சில்ஹெட்
  • அக்டோபர் 5: தென் ஆப்பிரிக்கா v வெஸ்ட் இண்டீஸ், டாக்கா
  • அக்டோபர் 5: வங்கதேசம் v இங்கிலாந்து, டாக்கா
  • அக்டோபர் 6: நியூசிலாந்து v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
  • அக்டோபர் 6: இந்தியா v பாகிஸ்தான், சில்ஹெட்
  • அக்டோபர் 7: வங்கதேசம் v குவாலிஃபையர் 2, டாக்கா
  • அக்டோபர் 8: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான், சில்ஹெட்
  • அக்டோபர் 9: வங்கதேசம் v வெஸ்ட் இண்டீஸ், டாக்கா
  • அக்டோபர் 9: இந்தியா v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
  • அக்டோபர் 10: தென் ஆப்பிரிக்கா v குவாலிஃபையர் 2, டாக்கா
  • அக்டோபர் 11: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து, சில்ஹெட்
  • அக்டோபர் 11: பாகிஸ்தான் v குவாலிஃபையர் 1, சில்ஹெட்
  • அக்டோபர் 12: இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ், டாக்கா
  • அக்டோபர் 12: வங்கதேசம் v தென் ஆப்பிரிக்கா, டாக்கா
  • அக்டோபர் 13: பாகிஸ்தான் v நியூசிலாந்து, சில்ஹெட்
  • அக்டோபர் 13: இந்தியா v ஆஸ்திரேலியா, சில்ஹெட்
  • அக்டோபர் 14: இங்கிலாந்து v குவாலிஃபையர் 2, டாக்கா
  • அக்டோபர் 17: முதல் அரையிறுதி, சில்ஹெட்
  • அக்டோபர் 18: இரண்டாவது அரையிறுதி, டாக்கா
  • அக்டோபர் 20: இறுதிப்போட்டி, டாக்கா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை