ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பாப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,துபாயில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 43 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய ஸ்மிருதி மந்தனா 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஹர்மன்பிரீத் கவுர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அந்த அணியில் அதிகபட்சமாகவே கவிஷா தில்ஹாரி 21 ரன்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 90 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா அணி தரப்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டநாயகி விருதை வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வெற்றி குறித்து பேசுகையில், “இப்போட்டியில் தொடக்கம் முதலே நாங்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று எண்ணத்துடன் களமிறங்கினோம். அதற்கேற்றவகையில் ஸ்மிருதியும் ஷஃபாலியும் எங்களுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். நாங்கள் எங்கள் விக்கெட்டுகளை தூக்கி எறிய விரும்பவில்லை என்று விவாதித்தோம். தொடக்க ஆட்டக்காரர்கள் அதைத்தான் செய்து எங்களுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

அதன்பின் ஜெமியும் நானும் ஒரு ஓவருக்கு 7-8 ரன்கள் எடுக்க விரும்பினோம், நாங்கள் ஓட்டத்துடன் சென்றோம். நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றவகையில் இன்றைய நாளும் எனக்கு சதாகமாக அமைந்தது. அதன்பின் எனக்கு சாதகாம இருக்கும் நிலையில் நான் என்னுடையை ஷாட்டுகளை விளையாட முடிவு செய்து அடித்தேன். இந்த விக்கெட்டுகள் பேட்டிங்கிற்கு சாதகமானை அல்ல. அதனால் நீங்கள் களத்தில் உங்களது ஸ்டிரைக்கை ரொட்ரேட் செய்வதுடன், உங்களுக்கு சாதகமான பந்துகளை மட்டுமே அடிக்க வேண்டும்.

Advertisement

அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்ற மைதானங்களில் உங்களால் ரன்களைச் சேர்க்க முடியும். இன்று நாங்கள் ஒரு அணிக்காக சிறப்பாக செயல்பட்டோம். மேலும் நாங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடியதுடன், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். அடுத்த போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்கள் ஒரு சிறந்த அணியாக இருந்து வருகின்றனர். அதனால் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News