மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா!

Updated: Sat, Oct 05 2024 20:35 IST
Image Source: Google

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ர 5ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சமாரி அத்தபத்து 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 25 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா மாதவி - நிலாக்‌ஷி டி சில்வா இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்ஷிதா மாதவி 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் அனுஷ்கா சஞ்சீவினி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேற்கொண்டு இறுதிவ்ச்ரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலாக்‌ஷி டி சில்வா 29 ரன்களை எடுத்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் மேகன் ஸ்காட் 3 விக்கெட்டுகளையும், சோஃபி மெலினக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி மற்றும் கேப்டன் அலீசா ஹீலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி சிறப்பான தொடக்கத்தை வழங்கிய நிலையில், மறுமுனையி களமிறங்கிய கேப்டன் அலீசா ஹீலி 4 ரன்களிலும், ஜார்ஜியா வர்ஹாம் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களையும், அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர் 12 ரன்களையும் சேர்த்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 43 ரன்களையும், போப் லிட்ச்ஃபீல்ட் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மேகன் ஸ்காட் ஆட்டநாயகி விருதினை வென்றார்,  

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை