மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பி பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொன்டது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய முனீபா அலி சதமடித்து அசத்தினார். பின் அவர் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அய்ரலாந்து தொடக்கம் முதலே சீரானா இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 16.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரெண்டர்காஸ்ட் 31 ரன்களும் , எமியர் ரிச்சர்ட்சன் 28 ரன்களும் எடுத்தனர் .பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News