AUS vs PAK, 1st test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Wed, Dec 13 2023 11:23 IST
AUS vs PAK, 1st test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு! (Image Source: Google)

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 (நாளை) ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபர் ஆசாம் கேப்டனாக பாகிஸ்தானை  வழிநடத்தி வந்த நிலையில், தற்போது அணியை ஷான் மசூத் வழிநடத்தவுள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேற முயற்சிக்கும். 

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லியான், ஜோஷ் ஹசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை