மகளிர் பிரீயர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ர யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை வழக்கம் போல் தனங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியிலும் ரசிகர்களுக்கு விருந்துபடைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மரிசேன் கேப் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த கேப்டன் மெக் லெனிங் இப்போட்டியிலும் அரைசதம் கடந்ததுடன், நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறினார். அதன்பின் 70 ரன்கள் எடுத்திருந்த மெக் லெனிங் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய மரிசேன் கேப் 16 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி 21 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஜெஸ் ஜொனசன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜொன்சன் 3 பவுண்டர், 3 சிக்சர்கள் என 42 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிஸ் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களையும் சேர்த்தர்ன். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் இந்த சீசனில் இரண்டாவது முறையாக டெல்லி கேப்பிட்டல்ஸ் 200+ ரன்களைக் குவித்துள்ளது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சப்னைம் இஸ்மையில், ராஜேஷ்வர் கெய்க்வாட், தஹ்லியா மெக்ராத், சோபி எக்லெஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News