WPL 2023: யுபி-யை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்யுமா ஆர்சிபி?

Updated: Wed, Mar 15 2023 21:18 IST
WPL 2023: RCB bowled out UP Warriorz by 135 runs! (Image Source: Google)

மகளிர் பீரிமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி கேப்டன் அலிசா ஹீலி, தேவிகா வைத்யா, தஹிலியா மெக்ராத் ஆகியோர் அடுத்ததடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிரன் நவ்கீரே - கிரேஸ் ஹாரிஸ் நிதான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் நவ்கிரே 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிம்ரன் ஷைக் 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடாரந்து தீப்தி சர்மா 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.3 ஓவர்களில் யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி தரப்பில் எல்லிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளையும், சோபி டிவைன், ஷோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை