WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி ஷஃபாலி மற்றும் கேப்டன் மெக் லெனிங் ஆகியோரது அதிரடியான அரசைதத்தின் மூலம் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 84 ரன்களை குவித்தார். இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங், “இங்கு ஒரு சிறந்த சூழல் மற்றும் வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. ஷஃபாலி அங்கு அற்புதமாக விளையாடினார். இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நாங்கள் நிறைய நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். அதுதான் இந்தப் போட்டிகளின் பெரிய விஷயம்.
நீங்கள் சாதாரணமாக விளையாடாதவர்களுடன் விளையாடுவீர்கள், நீங்கள் மிகவும் வேடிக்கையாக இருப்பீர்கள், நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்கிறீர்கள். இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நாங்கள் உணர்ந்தோம், ஆனால் விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் நன்றாக பந்து வீச வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அதனை சரியாக செய்ததன் காரணமாகவே இந்த வெற்றியை எங்களால் பெற முடிந்தது” என தெரிவித்தார்.