ஆர்சிபிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடுவார் - சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை!

Updated: Thu, Feb 29 2024 14:37 IST
ஆர்சிபிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடுவார் - சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹீலி மேத்யூஸின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணியிக்கு கிரன் நவ்கிரே - கேப்டன் அலிசா ஹீலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் கிரண் நவ்கிரே 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களையும், அலிசா ஹீலி 33 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழகாமல் இருந்த கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்களையும், தீப்தி சர்மா 27  ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக விலகியிருந்தார். 

அதேபோல் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் சப்னைம் இஸ்மயிலும் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக அந்த அணி இத்தொடரில் தங்களது முதல் தோல்வியைத் தழுவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பை அணி அடுத்ததாக விளையாடும் ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் இவர்கள் இருவரும் பங்கேற்பார்கள் என அந்த அணியின் பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. அதேசமயம் ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் நிச்சயம் விளையாடுவார் என நம்புகிறேன். ஆனால் ஷப்னிம் இஸ்மாயில் காயம் கொஞ்சம் தீவிரமடைந்துள்ளதால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியுமான என்பது தெரியவில்லை. மேலும் நாங்கள் அவருக்கு தேவையான அவகாசத்தை வழங்கியுள்ளோம். ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆர்சிபிக்கு எதிராக நிச்சயம் களமிறங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை