WPL 2025: அணிகள் தக்கவைத்த மற்ற விடுவித்த வீராங்கனைகளின் முழு பட்டியல்!

Updated: Fri, Nov 08 2024 09:56 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசன் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை பின்பற்றி மகளிருக்கு என்று பிரத்யேகமாக பிசிசிஐ 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் என்றழைக்கப்படும் டபிள்யூபிஎல் தொடரை பிசிசிஐ தொடங்கி நடத்தி வருகிறது. 

இத்தொடரில் மொத்தம் 2 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதன் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளன. இதையடுத்து இத்தொடரின் மூன்றாவது சீசன் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக வீராங்கனைகளுக்கான மினி ஏலமானது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கானைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அணிகள் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் பட்டியலை இப்பதிவில் காணலாம்.

மும்பை இந்தியன்ஸ் 

தக்கவைத்த வீராங்கனைகள்: ஹர்மன்பிரீத் கவுர், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, அமன்ஜோத் கவுர், சைகா இஷாக், ஜிந்திமணி கலிதா, சஜீவன் சஜனா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர், சோலி ட்ரையன், ஷப்னைம் இஸ்மாயில், கீர்த்தனா பாலகிருஷ்ணான் 

விடுவித்த வீராங்கனைகள்: பிரியங்கா பாலா, ஹுமைரா காசி, பாத்திமா ஜாஃபர், இஸி வோங். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தக்கவைத்த வீராங்கனைகள்: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ரேணுகா தாக்கூர், ஆஷா ஷோபனா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஏக்தா பிஷ்ட், எஸ் மேகனா, எல்லிஸ் பெர்ரி, சோஃபி டிவைன், டேனியல் வியாட்-ஹாட்ஜ், ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ், கேட் ஏ சுஜாஸ், கேட் ஏ.

விடுவித்த வீராங்கனைகள்: திஷா கசத், இந்திராணி ராய், நாடின் டி கிளர்க், சுபா சதீஷ், ஷ்ரத்தா போகர்கர், சிம்ரன் பகதூர், ஹீதர் நைட். 

டெல்லி கேப்பிடல்ஸ் 

தக்கவைத்த வீராங்கனைகள்: ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தனியா பாட்டியா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, மின்னு மணி, டைட்டாஸ் சாது, மெக் லெனிங், ஆலிஸ் கேப்சி, மரிஸான் கேப், ஜெஸ் ஜோனாசென், அனாபெல் சதர்லேண்ட்.

விடுவித்த வீராங்கனைகள்: லாரா ஹாரிஸ், அஷ்வினி குமாரி, பூனம் யாதவ், அபர்ணா மோண்டல்.

யுபி வாரியர்ஸ் 

தக்கவைத்த வீராங்கனைகள்: அலிஸா ஹீலி, கிரண் நவ்கிரே, ராஜேஸ்வரி கெய்க்வாட், அஞ்சலி சர்வானி, உமா செத்ரி, பூனம் கெம்னார், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், சோஃபி எக்லெஸ்டோன், சாமரி அத்தபத்து.

விடுவித்த வீராங்கனைகள்: லக்ஷ்மி யாதவ், பார்ஷவி சோப்ரா, எஸ் யாஷஸ்ரீ, லாரன் பெல். டேனியல் வையட்

குஜராத் ஜெயண்ட்ஸ்

தக்கவைத்த வீராங்கனைகள்: ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, தனுஜா கன்வர், ஷப்னம் ஷகில், மன்னத் காஷ்யப், சயாலி சத்கரே, மேக்னா சிங், பிரியா மிஸ்ரா, பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், லாரா வால்வார்ட், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், காஷ்வீ கௌதம், பார்தி எஃப்.

Also Read: Funding To Save Test Cricket

விடுவித்த வீராங்கனைகள்: சினே ராணா, லியா தஹுஹு, கேத்ரின் பிரைஸ், த்ரிஷா பூஜிதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ட்ரானும் பதான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை