மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஜார்ஜியா வோல் இணைதொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த கிரண் நவ்கிரேவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதன்மூலம் இவர்களில் பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்த நிலையில், 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்த கையோடு கிரண் நவ்கிரேவும் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சினெல்லே ஹென்றி 19 ரன்களையும், சோஃபி எக்லெஸ்டோன் 13 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா வோல் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 99 ரன்களை எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் தீப்தி சர்மா ரன் அவுட்டாகிட சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 

இதன் காரணமாக யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களைக் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளையும், சார்லெட் டீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News