மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விருந்தா தினேஷ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்திருந்த கிரண் நவ்கிரேவும் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தீப்தி சர்மா - தஹ்லியா மெக்ராத் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் தீப்தி சர்மா 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்வேதா செஹ்ராவத் 11 ரன்களுக்கும், கிரேஸ் ஹாரிஸ் 2 ரன்களுக்கும், உமே சேத்ரி 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் நிதானமாக விளையாடி வந்த தஹ்லியா மெக்ராத்தும் 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 109 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய சினெல்லே ஹென்றி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சினெல்லே ஹென்றி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் தனது அரை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். பின் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் சினெல்லே ஹென்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 12 ரன்களை எடுத்த கையோடு சோஃபி எக்லெஸ்டோனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனசன் 4 விக்கெட்டுகளையும், மரிஸான் கேப், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News