கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை - சஹா!

Updated: Tue, May 09 2023 22:49 IST
Wriddhiman Saha Reacts To WTC Snub! (Image Source: Google)

டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. கடந்த வருடத்திற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது போன்று இந்த வருடமும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, ஜூன் 7ஆம் தேதி இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியுடனான போட்டியின் போது காயமடைந்த கேஎல் ராகுல், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை போன்றே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் விலகினார். கேஎல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விர்திமான் சஹா அல்லது உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடி வரும் சர்ஃப்ராஸ் கான் அகிய இருவரில் ஒருவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இந்திய அணியோ இஷான் கிஷனிற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் இடம் கொடுத்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விருத்திமான் சஹா புறக்கணிப்பட்டதை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தனக்கு இதை பற்றி கவலை இல்லை என விர்திமான் சஹா ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சஹா, “நான் இப்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறேன்,  எனவே இதில் மட்டும் தான் நான் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். மற்ற விசயங்களை நான் பெரிதாக யோசிப்பது கூட இல்லை, குறிப்பாக எனது கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை. எனது வேலையை சரியாக செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை