விராட் கோலி & ரோஹித் சர்மா இந்திய அணியின் பேட்டிங்குக்கு வலிமை சேர்ப்பார்கள் - மைக்கேல் ஹஸ்ஸி!

Updated: Sun, May 28 2023 20:46 IST
WTC Final: Mike Hussey Picks Kohli, Rohit As Key Batters For India's Success Against Australia (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜீன் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. லண்டனின் ஓவலில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கடந்த கால விராட் கோலியை பார்ப்பது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து பேசிய அவர், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வெற்றி பெறுவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கிய காரணிகளாக இருப்பார்கள். கடந்த கால விராட் கோலியினை பார்ப்பது இனி கடினம். அவர் மீண்டும் தன்னுடைய சிறப்பான ஃபார்முக்கு வந்துவிட்டார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணியின் பேட்டிங்குக்கு வலிமை சேர்ப்பார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வித்தியாசமானது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மை வித்தியாசமாக இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்கள் என நினைக்கிறேன். பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு வலிமை சேர்ப்பார்கள். இந்திய அணியிலும் நிறைய சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். முகமது சிராஜ், முகமது ஷமி போன்ற சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களும், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர். 

அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கப் போகிறார்கள். சிறந்த அணிகள் இரண்டும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அவர்களில் யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியிருந்தார் விராட் கோலி. கடந்த சில மாதங்களாக தனது சிறப்பான ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை