நட்ப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது குசால் பெரேரா, பதும் நிஷங்கா ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் விளாச, பதும் நிசங்கா 32 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபடத்து. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படை இந்திய அணிக்கு 8 ஓவர்களீல் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களையும், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸச்ர் என 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.
இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். அதன்படி நடப்பாண்டு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 18 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதில் ஒரு இரட்டை சதம், 2 சதம் மற்றும் 5 அரைசதங்கள் என 1017 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.
மேற்கொண்டு இளம் வயதில் ஒரு ஆண்டில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியளிலும் ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தை பிடித்திருக்கும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7ஆவது வீரராக இப்பட்டியலில் இணைந்துள்ளார். அதிலும் தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களை எட்டிய இளம் இந்திய வீரர்
- 19 வயது - சச்சின் டெண்டுல்கர் (1992)
- 21 வயது - ரவி சாஸ்திரி (1983)
- 21 வயது - வினோத் காம்ப்ளி (1993)
- 21 வயது - சச்சின் டெண்டுல்கர் (1994)
- 22 வயது - தினேஷ் கார்த்திக் (2007)
- 22 வயது - விராட் கோலி (2010)
- 22 வயது - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024)*