ஒரு ஆண்டில் அதிக ரன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவ்ரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று முடிந்தது.
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்ற் வெளியிட்டுள்ளது. இதில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து சாதனை பட்டியாலில் இடம்பிடித்துள்ளார். அந்தவகையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களைச் சேர்த்ததன் மூலம், நடப்பு ஆண்டில் 1478 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் நடப்பு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
இதுதவிர்த்து ஒரு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய அணியின் முதல் இடது கை வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இதுதவிர்த்து ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகி்யோரை பின்னுக்கு தள்ளியதுடன், அந்த பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த இந்திய வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் (2010) - 1562 ரன்கள் (23 இன்னிங்ஸ்)
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024) - 1478 ரன்கள் (29 இன்னிங்ஸ்)
- வீரேந்திர சேவாக் (2008) - 1462 ரன்கள் (27 இன்னிங்ஸ்)
- வீரேந்திர சேவாக் (2010) - 1422 ரன்கள் (25 இன்னிங்ஸ்)
- சுனில் கவாஸ்கர் (1979) - 1407 ரன்கள் (26 இன்னிங்ஸ்)