ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!

Updated: Tue, Jul 02 2024 14:01 IST
Image Source: Google

நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இத்தொடரின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அணியின் கெபெடன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் சர்தேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். 

அதேசமயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி வீரர்களுடன் ஓய்வரையில் தனது பிரிவு உபசரிப்பு விழாவில் தன்னுடைய பயிற்சியாளர் பயணம் குறித்து, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் குறைவாக உள்ளது, ஆனால் நான் சொல்ல விரும்புவது நம்பமுடியாத நினைவகத்தின் ஒரு பகுதியாக என்னை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. இந்த தருணங்களை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்கள். இது ரன்கள் மற்றும் விக்கெட் பற்றியது அல்ல; ஏனெனில் அதனை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் நினைவில் கொள்ள மாட்டீர்கள், ஆனால் இது போன்ற தருணங்களை நீங்கள் நினைவில் கொள்வீர்கள்.

தற்போது நாம் அனைவரும் என்ன செய்தோம், உதவி ஊழியர்கள் என்ன செய்தார்கள், அனைவரின் கடின உழைப்பும் தியாகமும் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் உங்களின் சாதனையைப் பற்றி பெருமை கொள்கிறது. மேலும் கடந்த நவம்பர் மாதம் ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி. அதன் காரணமாகவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தோல்விக்கு பிறகும் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்த தருணம் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி.  ரோஹித் சர்மாவிடம், ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என்ற முறையில் அதிகம் உரையாடியுள்ளேன்.  அதில் ஒருசில முறை உடன்பாடுகள் இருக்கும், ஒருசில முறை இருவருக்கும் வேறுபாடுகள் இருக்கும். ஆனாலும் அவை அனைத்திற்கும் நன்றி. எங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை