விவாகரத்து வதந்தி குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சஹால்!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், நடன இயக்குனர்-நடிகை தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து வதந்திகளால் கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இருவரும் இன்னும் தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் இந்த ஊகங்கள் குறித்து சமூக ஊடகங்களில் ஏதாவது ஒன்றைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் தனஸ்ரீ வர்மா இந்த விஷயம் குறித்து மௌனம் களைத்த அவர், உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் விவாகரத்து வதந்தி குறித்து தற்சாமயம் யுஸ்வேந்திர சஹாலும் தனது சமூக வலைதள பதிவின் மூலம் மௌம் களைத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அனால் யுவேந்திர சாஹல் தனது அறிக்கையில் தனஸ்ரீ வர்மாவைப் பற்றியோ அல்லது இருவருக்கும் இடையேயான உறவைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சில சமூக ஊடகப் பதிவுகள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மையாகாமல் இருக்கலாம் என்ற ஊகங்களை வெளியிட்டு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது பதிவின் மூலம் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து சஹால் தனது பதிவில், எனது ரசிகர்கள் அனைவருக்கும் அவர்களின் அசைக்க முடியாத அன்பு மற்றும் ஆதரவுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அது இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது. ஆனால் என்னுடைய பயணம் இன்னும் முடிவடையவில்லை, ஏனெனில் எனது நாட்டிற்கும், எனது அணிக்கும், எனது ரசிகர்களுக்கும் இன்னும் பல சிறந்த ஓவர்கள் மீதமுள்ளன. ஒரு வீரராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், அதே நேரத்தில் நான் ஒரு மகன், ஒரு சகோதரர் மற்றும் ஒரு நண்பர்.
சமீபத்திய நிகழ்வுகள், குறிப்பாக எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய மக்களின் ஆர்வத்தை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், சில சமூக ஊடகப் பதிவுகளில் சில விஷயங்களைப் பற்றி நான் ஊகித்துள்ளேன், அவை உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதனால் இந்த ஊகங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அவை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
எனது குடும்ப உருப்பினர்கள் அனைவருக்கும், குறுக்குவழிகளை எடுப்பதற்குப் பதிலாக அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய பாடுபடுவதை எப்போதும் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளன, மேலும் நான் இந்த விசயத்தில் உறுதிபூண்டுள்ளேன். தெய்வீக ஆசீர்வாதங்களுடன், நான் எப்போதும் உங்கள் அன்பையும் ஆதரவையும் தேடுவேன், ஆனால் அனுதாபத்தை அல்ல." என்று பதிவுசெய்துள்ளர். இவரது பதிவானது இணையத்தில் தற்சமயம் வைரலாகி வாருகிறது.