SL vs AFG, 1st ODI: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஸத்ரான்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கான்!

Updated: Fri, Jun 02 2023 21:39 IST
Zadran Stars As Afghanistan Beat Sri Lanka By Six Wickets In First ODI (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹம்பன்தோட்டாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா - கருணரத்னே இணை களமிறங்கினர். இதில் கருணரத்னே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பதும் நிஷங்காவும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - தனஞ்செய டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 51 ரன்களில் டி சில்வா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்காவும் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழண் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மெத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இப்ரஹிம் ஸத்ரான் - ரஹ்மத் ஷா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.    

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 55 ரன்களில் ரஹ்மத் ஷா விக்கெட்டை மதீஷா பதிரானா கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 38 ரன்களுக்கும் அட்டமிழக்க, மறுமுனையில் சதத்தை நெருங்கிய நிலையில், 98 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து 2 ரன்களில் தனது சதத்தை  தவறவிட்டார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய முகமது நப, நஜிபுல்லா ஸத்ரான் இணை அணிக்கு வெற்றியைக் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், இலங்கை அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை