ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி ஆஃப்கானிஸ்தனை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் 5 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தியது. 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், சதத்தை நோக்கியும் முன்னேறினர். 

அதன்பின் 94 ரன்களைச் சேர்த்திருந்த ரஹ்மத் ஷா, முசரபானி பந்துவீச்சில் ஆட்டமிழந்து 6 ரன்களில் சதத்தை தவறவிட, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 88 ரன்களில் முசரபானியிடம் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது நபியும் 10 ரன்கள் எடுத்த நிலையில் முசரபானியிடம் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரஷித் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருசில் பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஷித் கான் 17 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்தார். 

ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News