ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்த்னர். அத்துடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

Advertisement

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த செதிகுல்லா அடல் சர்வதேசா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்துல் மாலிக் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 84 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 ரன்களிலும், ரஹ்மத் ஷா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் சிறப்பாக விளையாடி வந்த செதிகுல்லா அடலும் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 104 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - முகமது நபி இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் முகமது நபி 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க,  இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளி இழந்து 286 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளையும், ட்ரெவர் குவாண்டு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News