ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs AFG 2nd T20I Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கண்க்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்ற்பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. தேசமயம் தொட்ர் வெற்றிகளைக் குவித்து வந்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்போது தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்று அதற்கு பதிலடியைக் கொடுக்கும் முனைப்புடன் விளையாடவுள்ளது. இதனால் இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs AFG 2nd T20I: Match Details
மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான்
இடம்: ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
நேரம்: டிசம்பர் 13, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)
ZIM vs AFG 2nd T20I Live Streaming Details
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
ZIM vs AFG: Head-to-Head In T20is
- Total Matches: 16
- Zimbabwe: 02
- Afghanistan: 14
- No Result: 00
ZIM vs AFG: Ground Pitch Report
இப்போட்டி நடைபெறும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 56 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 33 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 24 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 153 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 133 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 234 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Zimbabwe vs Afghanistan Predicted XIs
ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி, டியான் மியர்ஸ், வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா (கே), ரியான் பார்ல், வெலிங்டன் மஸகட்ஸா, தஷிங்கா முசெகிவா, ரிச்சர்ட் ந்ங்கராவா, பிளெஸிங் முஸரபானி, ட்ரெவர் குவாண்டு
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், முகமது இஷாக், ரஷித் கான் (கே), முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக்
ZIM vs PAK Dream11 Team
- Wicket-keeper: ரஹ்மானுல்லா குர்பாஸ்
- Batters: ஹஸ்ரதுல்லா ஸஸாய், பிரையன் பென்னட், கரீம் ஜானத்
- All-rounders: சிக்கந்தர் ரஸா, ரியான் பார்ல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி
- Bowlers: ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, பிளஸ்ஸிங் முசரபானி
ZIM vs AFG 2nd T20 Dream11 Prediction, ZIM vs AFG Dream11 Prediction, Today Match ZIM vs AFG, ZIM vs AFG T20 Series, ZIM vs AFG Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Afghanistan
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.