ZIM vs BAN: மாதேவெர், மஸகட்சா ஆபாரம்; வங்கதேசத்தை வீத்தியது ஜிம்பாப்வே!

Updated: Sat, Jul 24 2021 13:35 IST
ZIM vs BAN: Zimbabwe win by 23 runs and keep the series alive (Image Source: Google)

ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மாதேவெர் அரைசதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரியான் பர்லும் தனது பங்கிற்கு 34 ரன்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணி தொடக்கத்திலேயே முகமது நைம், சௌமியா சர்கார், மெஹிதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோரது விக்கெட்டை இழந்து தடுமாறியது. 

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்ச தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் வெலிங்டன் மஸகட்சா, ஜோங்வா ஆகியோர் தலா 3  விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை