ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஸ்டீபன் தொஹானி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிர்லிங் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான தொஹானி அரைசதம் கடந்தார். 

இதையடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த தொஹானி 84 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹேரி டெக்டர் இப்போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவரும் 75 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்காளை சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் டெண்டாய் சதாரா 3 விக்கெட்டுகளையும், பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மருமணி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கையா - ஷிபாபா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கையா அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஷிபாபா 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய கேரி பேலன்ஸ் - சிக்கந்தர் ரஸா ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் கேரி பேலன்ஸ் அரைசதம் கடந்தார். பின் 52 ரன்களில் பேலன்ஸும், 25 ரன்களில் ரஸாவும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய ரியான் பார்லும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் 47.3 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News