அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடியவுசெய்ய, அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மருமணி ரன்கள் ஏதுமின்றியும், மதவெரே 9 ரன்களுக்கும், கேப்டன் சீன் வில்லியம்ஸ் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த கமுன்ஹுகம்வே- ரியான் பார்ல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

பின் 39 ரன்களில் கமுன்ஹுகம்வே விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய கிளைவ் மடாண்டே அதிரடியாக விளையாடி 44 ரன்களையும், ரியான் பார்ல் 38 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பால் ஸ்டிர்லிங் 10 ரன்களுக்கும், ஆண்டி பால்பிர்னி 8 ரன்களுக்கும், லோர்கன் டக்கர் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஹாரி டெக்டர் - கர்டிஸ் காம்பேர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கர்டிஸ் காம்பேர் 37 ரன்களிலும், ஹாரி டெக்டர் 48 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அயர்லாந்து அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த மார்க் அதிர் 19 ரன்களையும், ஜார்ஜ் டக்ரேல் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News